නව රජය යටතේ දින 90 ක් රඳවා තබා ගැනීමෙන් පසු මාතලේ මහේස්ත්රාත් අධිකරණය විසින් අද නිදහස් කරන ලද #PTA පනත යටතේ රඳවා තබාගත් දෙමල ජාතික රැඳවියෙකු වන සුබ්රමනියම් සුවේන්ද්ර රාජන්, මහනුවර මහජන කවුන්සිලයේ සාමාජිකයින් විසින් පිලිගන්නා ලදී.
ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ නීති විරෝධී ලෙස වසර 15 ක් රඳවා තබාගෙන සිටි සුවේන්ද්ර රාජන්, පසුගිය වසරේ මුල් භාගයේදී නිදොස් කොට නිදහස් කරන ලද අතර, ආරුගම්බේ සිද්ධියෙන් පසු 2024 ඔක්තෝබර් මාසයේදී නැවත වරක් ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ අත්අඩංගුවට ගන්නා ලදී. ඔහු නැවත වරක් නිදොස් කොට නිදහස් කර ඇත, නමුත් මාසයේ සෑම අවසාන ඉරිදාවකම පොලිස් ස්ථානයට ගොස් අත්සන් කරන ලෙස දන්වා ඇත. දශක පහකට ආසන්න කාලයක් ශ්රී ලංකා රාජ්යය විසින් කුරිරු ලෙස පීඩාවට පත් කර ඇති ත්රස්තවාදය වැළැක්වීමේ පනතේ වින්දිතයින් සිය ගණනක් අතරින් සුවේන්ද්ර රාජන් එක් අයෙක් පමණි.
1979 දී “තාවකාලික පනතක්” ලෙස හඳුන්වා දී වසර 45 ක් ගතවී ඇතත්, ශ්රී ලංකා රාජ්යය විසින් වාර්ගික හා ආගමික සුළුතර ප්රජාවන්ට සහ ප්රතිවාදී අදහස් දරන්නන් ට එරෙහිව ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත අඛණ්ඩව උපයෝගී කරගනු ලැබේ.
ම්ලේච්ඡ පනතක් වන ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත අවලංගු කිරීමේ මැතිවරණ පොරොන්දුව ඉටු කරන ලෙස අපි ජාතික ජන බලවේගයේ රජයෙන් ඉල්ලා සිටිමු.
புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்ட தமிழ் #PTA கைதி சுப்பிரமணியம் சுவேந்திர ராஜனை, கண்டி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். 15 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அறுகம்குடா சம்பவத்தைத் தொடர்ந்து, 2024 ஒக்டோபரில் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார், ஆனால் மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திடுமாறு கூறப்பட்டுள்ளது. அண்ணளவாக ஐந்து தசாப்தங்களாக இலங்கை அரசால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் இரக்கமின்றி துன்புறுத்தப்பட்டு வரும் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களில் சுவேந்திர ராஜன் ஒருவர்.
1979 ஆம் ஆண்டு “தற்காலிகச் சட்டமாக” அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை அரசால் இன மற்றும் மத சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அதிருப்தியாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.